முயற்சிக்காதே
முயற்சிக்காதே.....😎
Banusha Aruchnarasa
TLM, Level 2
Faculty of Engineering
என் போன்ற பெண்களை சகித்து, ரசிக்க முடியும் என்றா நினைத்து கொண்டிருக்கிறாய்...
இல்லை.. என் போன்ற ஒவ்வொருவரும் ஓரோர் ரகம்..
நாங்கள் ஒருபோதும் நிலையாய் நின்றதில்லை..
இன்று பெரிதாய், முழுதாய், நிறைவாய் தெரிவது
நாளை துமியாய் கூட தெரியாது எமக்கு...
எங்கள் பிடிவாதங்கள் வார்த்தைகளை தாண்டி சில காலங்களுக்கு நிலைப்பதே கடினம்...
நாங்கள் காலநிலை போன்றவர்கள்,
மாற்றங்களை தேடுபவர்கள்..
எங்கள் விருப்புக்கள் மாறாது, ஆனால் முக்கயத்துவம் மாறிக்கொண்டே இருக்கும்...
நீ சரியானதை தான் சொல்வாய்..
நாங்கள் பிழையானதை சரியென்று நிற்போம்..
அன்பைக் காட்டி திணறச் செய்யவும்,
வெறுப்பை கொட்டி வலிக்க செய்யவும் எமக்கு நாமே நிகர்..
எம்மை மாற்றிவிட முயற்சிக்காதே..
தடமறியாமல் தொலைந்து போவாய்...
எங்கள் திமிர் எது நடந்தும் குறையப் போவதில்லை...
எத்தனை வலிகளுக்கு பின்னும் நிமிர்ந்து புன்னகைக்க எம்மால் மட்டுமே முடியும்..
முயற்சிக்காதே....
எங்களில் ஒருவரைப் புரிந்து கொள்ள உனக்கு ஒரு ஆயுள் போதாது.
நாங்கள் பரிபூரணமானவர்களல்ல.
நாங்கள் தனித்துவமானவர்கள்.
எங்கள் தனித்துவம் உனக்கு திமிராகத் தெரியலாம்.
எமக்கு உன் அகராதியில் அடங்காப்பிடாரி என்று பெயர் இருக்கலாம்.
தெரிந்து கொள், நீ காண்பது என்னை அல்ல; நான் உனக்கு வெளிக்காட்டும் என் பக்கத்தையே..
ஆகவே,
முயற்சிக்காதே..
இறுதியில் ஓர் அலட்சிய புன்னகை மட்டுமே உனக்காய் காத்திருக்கும்....😎
Banusha Aruchnarasa
TLM, Level 2
Faculty of Engineering
Post a Comment