Header Ads

வெற்றிப்படியில் நான்கு ருழஆ மாணவர்கள்.


"இவ்வளவூ தூரம் வந்திருக்கும் எங்களது பயணம் இலகுவாக அடையப்பட்டதொன்ரன்று" எனக் கூறுகிறார்கள் BIT MASTERS வீரர்கள்.

இன்றைய தினங்களில் மொறட்டுவைப் பல்களைக் கழகத்தில் அதிகமான மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த டீவை ஆயளவநசள அணி. அணி அங்கத்தவர்களாஅகிய லக்மால்இ சரித் சதூஷ மற்றும் சானக ஆகியர்கள் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக

Microsoft Imagin Cup 2016 இன் உலக இறுதிச் சுற்றில் போட்டியிடவிருக்கின்றனர். Microsoft Imagin Cup ஆனது தொழில்நுட்பத்துறையில் காணப்படும் அதிக சவால் மிக்க ஒரு போட்டியாகும். இத்தகைய போட்டியில் கடைசிச் சுற்றுக்கு தெரிவாகுவதென்பது இலகுவான காரியமன்று. இது வரை அவர்கள் கடந்து வந்த பயணம் பற்றிய கலந்துரையாடலே இது.

கேள்வி: நீங்கள் Microsoft Imagin Cup புத்துருவாக்கப் பிரிவில் இறுதிச் சுற்றில் இலங்கையை பிரதிநித்துவப்படுத்தவிருக்கும் முதல் அணியினர். எத்தகைய புத்துருவாக்கத்தை நீங்கள் மேற்கொண்டீர்கள்?

எங்களுடைய உற்பத்தி யூஅpடரள இல் மூலமாக நாங்கள் Microsoft Imagin Cup 2016 இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியமையிட்டு நாங்கள் பெருமைப் படுகிறௌம். யூஅpடரள என்பது செலவூ குறைந்தஇ இலகுவாக பயன்படுத்தக் கூடியஇ ஒரு அறிவார்ந்த டிஜிட்டல் விளம்பரப்படுத்தல் ஒரு தீர்வூ ஆகும். நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இதனை உருவாக்கியதுடன் பல்வேறுபட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றௌம்.

கேள்வி: யூஅpடரள என்ற அற்புதமான உற்பத்தியை தயாரிக்க உங்களைத் தூண்டிய காரணி எது?

இதன் ஆரம்பம் Google I/O Hackathon 2015 உடன் தொடர்புடையது. ஒரு நாள் எமது நண்பர்களுடன் ஒரு திரைப்படம் பார்க்க சென்ற சமயம் அங்கு டிஜிட்டல் விளம்பரப்படுத்தலை அவதானித்தோம். அதில் பல்வேறுபட்ட விளம்பரங்கள் காட்டப்பட்டதுடன் அவற்றை நாங்கள் கவனமாக உற்று நோக்கினோம். அச்சமயம் தான் இத்துறையில் நம்மால் வெய்யக்கூடிய மாற்றங்கள் பற்றி யோசித்தோம். அத்துடன் நாங்கள் பலமாதங்களாக மனித-கணனி தொடர்புடன் கூடிய பல செயற்றிட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அதனடிப்படையில் மனித நடத்தையை கவனித்தில் கொண்டு ஒரு புத்துருவாக்கம் செய்ய தீர்மானித்தோம். அதன் பின்னணியிலேயே யூஅpடரள தோற்றம் பெற்றது.

கேள்வி: யூஅpடரள இல் காணப்படுக் கருப்பொருளையே மையமாகக் கொண்ட உட்பத்திகள் சந்தையில் காணப்படுகின்றதா? அப்படியாயில் யூஅpடரள எத்தகையில் மாற்றத்தை வழங்குகிறது?

டிஜிட்டல் விளம்பரத்துரையில் மிகவூம் பிரசித்தி பெற்ற நாமங்களான டீசiபாவளுபைn மற்றும் Phடைடipள ளுபையெபந இருக்கின்றன. அவர்கள் வித்தியாசமான வடிவங்களில் கருப்பொருளில் விளம்பரங்களை காட்சிப் படுத்துகின்றன. 

ஆனாலும் எங்கள் உற்பத்தி மூன்று அடிப்படைகளில் அப்பொருட்களில் இருந்து முன்னேற்றகரமான மாற்றத்தை வழங்கியூள்ளது. 1. விளம்பரப்படுத்துனருக்கு விளம்பரம் தொடர்பாக பின்னூட்டங்களை வழங்குதல். 2. இடம்இ நேரம்இ பார்வையாளர்களின் வயது மற்றும் பால் அடிப்படையில் விளம்பரங்களை அறிவார்ந்த ரீதியில் காட்சிப்படுத்தல்இ 3. தயாரிப்பதற்கு செலவூ மிகக் குறைந்த புத்துருவாக்கமாக காணப்படல் ஆகியவையே ஆக்காரணிகள்.

கேள்வி: ஒரு அணியாக செயற்பட்டு யூஅpடரள இன் வெற்றிக்காக உழைக்கிறீர்கள். உங்கள் அணியினரின் திறமைகளை எவ்வாறு முகாமைத்துவப்படுத்தினீர்க்ள்?

பல்வேறு பட்ட திறமைகளுடன் கூடிய ஒரு அணியிற்கு தலைமை தாங்குவது பெரு மகிழ்ச்சிக்குரிய விடயம். 

முதலில் சானகவைப் பற்றி கூறினால்இ அவர் இணைய வலைத்தலங்களை உருவாக்குவதில் திறமையூள்ள்வர். அத்துடம் மொறட்டுவைப் பல்கலைக்கழக றௌட்ரக்ட் சங்கத்தில் தகவல் தொழில்நுட்பத்திற்கான தலைமைப் பதவியை தாங்குகிறார். 

என் நண்பர் சரித்இ இவர் ஒருங்கிணைந்த கணனிப் பொறியட் துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்வதுடன் எங்கள் செயற்றிட்டத்தின் வன்பொருள் தொடர்பான விடயங்களை இவரே கவனிக்கிறார்.

அத்துடன் சதூஷஇ இவர் எங்களுடைய செயற்றிட்டத்தின் வணிக மற்றும் விளம்பரபடுத்தலை கவனிப்பதுடன் அவர் பல்கலைக்கழக யூஐநுளுநுஊ சங்கத்தின் வணிக அபிவிருத்து தொடர்பான உதவி தலைவராக செயற்படுகிறார். 

அத்துடன் என்னைப்பற்றி கூறுகையில்இ நான் கணனி விஞ்ஞான துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்வதுடன் CIMA தொழில்முறைசார் தகுதிகளின் காரணமாக வணிக முறைமைகளைப் பற்றிய அறிவூம் காணப்படுகிறது.

இத்தகைய பல்வகைப்பட்ட திறமைகளுடன் கூடிய அணியினர் நம் வெற்றிக்கு உயரிய பங்களிப்பை வழங்குகின்றனர்.

கேள்வி: வேகமாக மாற்றமடையக் கூடிய ஒரு துறையிலேயே நீங்கள் உங்களுடைய உற்பத்தியை மேற்கொள்கிறீர்கள். இந்த இயல்பான தன்மையினால் வேகமாக புத்துருவாக்கம் காலாவதியாகக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அந்த சவாலை எப்படி நீங்கள் எதிர்கொள்வீர்கள்?

நாங்கள் யூஅpடரள இனை உருவாக்கியது நிகழ்காலத்தை நோக்காகக் கொண்டு அல்ல. எங்கள் இலக்கு எதிர்காலமே. நாங்கள் தொடர்ந்து புத்துருவாக்கம் செய்வோம் அத்துடன் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களை உள்ளடக்குவோம். இதன் மூலம் என்கள் உற்பத்தி சந்தையில் அசையாத இடத்தை பிடிப்பதை உறுதிப் படுத்துவோம்.

கேள்வி: Microsoft Imagin Cup 2016 இன் இறுதிச் சுற்றில் போட்டியிடப் போகும் உங்கள் அனைவருக்கும் என்களது வாழ்த்துக்கள். கடைசியாகஇ சாதனைகளை படைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியில் இதர மாணவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவூரை என்ன?

இலங்கையின் எதிர்காலம் எங்கள் கையிலே. ஆக சாதனைகளைப் படைக்கும் பொறுப்பும் எங்கள் கைகளிலேயே உள்ளது. நாட்டை வளப்படுத்தும் பொறுப்பை நாங்களே சுமக்க வேண்டும்.

இந்த பயணம் இலகுவானதொன்று அன்று. தியாகம்இ அர்ப்பணிப்புஇ ஒற்றுமை மற்றும் கடும் உழைப்பு என்பவை எங்களின் கனவை நிஜமாக்கியது. அத்துடன் இலங்கையின் முதலாவதாக இத்தகைய இறுதிச் சுற்றில் பங்கேற்பது பற்று மிகவூம் மகிழ்ச்சி அடைகிறௌம். நாங்கள் எங்கள் பாதையை உறுதியாக போட்டுவிட்டோம். உங்கள் வெற்றிப் பாதையை உறுதியாக போட்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க முயற்சிப்போம். 







Conducted By : Rafhan Rifan

No comments